என் மண்ணின் வாசனையோடு வருகின்றேன்.

நண்பர்களே!

நான் நேசித்த மண்ணின் நெஞ்சு நிறைந்த நினைவுகளை இம் மருதநிழல் நின்று பேச வருகின்றேன். தென் தமிழீழத்தின் மண்வாசனை பேசும் களமாக அமையவுள்ளதால், தென் தமிழீழத்தின் மருதநிலங்களில், ஆற்றங்கரைகளில், நீண்டு நெடிதுயர்ந்து நிழல்தரும் மருதமரத்தையும், அந்த மண்ணின் வயலும் வயல்சார்ந்த பாங்கினையும் குறிப்பதாக இத்தளத்திற்கு மருதநிழல் எனப்பெயரிட்டுள்ளேன். அந்த மண்ணிலே வாழ்ந்த காலங்களில் மருதநிழல்களில் கீழிருந்து விரிந்த என் எண்ணங்களும், அனுபவங்களும், ஆக்கிரமிப்பால் சிதறடிக்கப்பட்டுள்ளபோதும், என் நிலம் மீட்சி பெறும். மீளவும் என் நிலத்தில் மருதநிழலின் குளிர்ச்சியில் மனம்மகிழ்வேன் எனும் நம்பிக்கை நிறையவே உண்டு. அந்நாள் வரையில் இந்நிழலில், உங்களோடு என் நிலம் குறித்த எண்ணங்களைப் பேசவுள்ளேன். வாருங்கள்!

2 Comments:

  1. இளங்கோ-டிசே said...
    மருதமரக்காலங்கள் பற்றி நிறைய எழுத வாழ்த்துக்கள், மலைநாடன்.
    கானா பிரபா said...
    ஆஹா
    இன்னொரு வீடு கட்டியாச்சா:-)
    தென் தமிழ் ஈழத்திலிருந்து சொற்பமாகவே வரலாற்றுத்தகவல்கள் இணைத்தில் அரங்கேறிவந்துள்ளன. உங்களின் புதிய தளம் அந்தக்குறையைப் போக்கும் என்று நம்பி வாழ்த்துகின்றேன்.

Post a Comment




 

நன்றி, வணக்கம்.