புலியெதிர்ப்பும், புனிதப்படுத்தலும்.

இதை எழுதக் கூடாது என்றுதான் இதுவரையில் நினைத்திருந்தேன். ஏற்கனவே இடியப்பச் சிக்கலாகவே புரியப்பட்டிருக்கும், இலங்கை இனப்பிரச்சனை இன்னமும் குழப்பமாக அறியப்பட என் எழுத்துக்களும் அமைந்துவிடக் கூடாது என அமைதியாக இருந்தேன். ஆனாலும், போகிற போக்கில் புலியெதிர்ப்புக் கோஷத்தில், சில பொய்மைகள் புனிதப்படுத்துவதை ஏற்றறுக் கொள்ள முடியாமையால் இப்பதிவை எழுதுகின்றேன். தென்தமிழீழத்தின் உண்மைநிலையின் ஒரு சாட்சியமாகவே இதைப் பதிவு செய்கின்றேனொழிய, எந்தவொரு பிழைகளையும் நியாயப்படுத்துவதோ அல்லது எந்தவொரு மக்கள் சமூகத்தின் மீதும் வீண்பழி சுமத்துவதோ என் நோக்கம் அல்ல.


எண்ணிப்பார்க்கும்போது ஆச்சரியமாகவிருக்கிறது. நானறிந்தவரையில் இதுவரை எந்தவொரு ஊடகத்திலும், யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லீம்கள் வெளியேற்றப்பட்டதே பெரிதாகப் பேசப்பட்டுள்ளது. தென்தமிழீழத்தில் தமிழ்மக்கள்மீது முஸ்லீம்கள் செய்த கொடுமைகள் எதுவும் பெரிதாகக் கதைக்கப்படவில்லை. இதற்கான காரணம் என்னவென்றும் தெரியவில்லை. அதற்காக முஸ்லீம்கள் தமிழர்கள் மீது தாக்குதல்களைச் செய்யவில்லை என்றும் சொல்ல முடியாது.

ஈழவிடுதலைப்போராட்டம் முகிழத் தொடங்கிய 1977ம் ஆண்டுகாலப்பகுதியிலிருந்து, 1982ம் ஆண்டு காலப்பகுதி வரையில், தற்போது முக்கியத்துவம் வாய்ந்ததாக செய்திகளில் அறியப்பட்டிருக்கும் மூதூர் தொகுதியில் வாழ்ந்தவன் என்ற வரையில், என்னால் நேரடியாக அறிந்துணரப்பட்ட, முஸ்லீம்களின் தமிழ்விரோதச் செயற்பாடுகள் சிலவற்றை இங்கே அடையாளப்படுத்துகின்றேன்.


இலங்கையின் தேசிய இனங்களுக்கான பிர்ச்சனையில், தமிழர்களுக்கும் சிங்களவர் அரசியலளார்களுக்கும் பிரச்சனை தோன்ற வெகுகாலத்துக்கு முன்னமே, முஸ்லீம்களுக்கும் சிங்களஆட்சியாளர்களுக்குமான மோதல்கள் ஏற்பட்டு, அதுவே சிங்கள முஸ்லீம் கலவரம் வரைக்கும் சென்றதாகவும், பின்னர் தமிழ்அரசியல்தலமைகளின் தலையீட்டால், அவை தணிக்கப்பட்டதாகவும் வரலாறுரைக்கும். பின்னாளில் தமிழர்கள்மீதான் சிங்கள ஆக்கிரமிப்புக்கள் ஆரம்பமானபோது, அதற்கு ஏதிரான போராட்டங்கள் படிப்படியாக குழுநிலைப்போராட்டங்களாக தென் தமிழீழத்தில் இளைஞர்களால் தொடங்கப்பட்டபோது, அவற்றை சிங்கள அதிகாரவர்க்கத்ததுக் காட்டிக் கொடுத்த கயமைத்தனத்தில் முஸ்லீம்களின் எதிர்வினை ஆரம்பமாகியது எனச் சொல்லலாம். இதற்கு சிங்கள அதிகார வர்க்கம் அவர்களுக்குக் கொடுத்ததெல்லாம், வேலைவாய்ப்புக்களும், பதவியுயர்வுகளுமாகும்.


மூதூர் இரட்டைப்பாரளுமன்ற உறுப்பினர் தொகுதி. இதிலே ஒரு உறுப்பினர் முஸ்லீமாக வருவார். அப்படி வருபவர்கள் சிங்களப்பேரினவாத கட்சிகளில் ஏதாவதொன்றினைப் பிரதிநிதித்துவப்படுத்துவார். அப்படி மாறிமாறித் தெரிவாகிய முஸ்லீம் தலைவர்களின் உறவினர்களும், ஆதரவாளர்களும் தமிழ இளைஞர்களுக்குக் கொடுத்த இன்னல்கள் சொல்லிமாழாது. இதைப் பெயர்விபரங்களுடன் கூடச் சொல்ல முடியும். ஆனால் இங்கு அதைசெய்ய விரும்பவில்லை. ஒருதடவை சிங்கள அரச புலனாய்வுத்துறை தமிழ் இளைஞர்களின் பெயர் பட்டியல் ஒன்றை வைத்துக்கொண்டு, அவர்களைத் தேடியபோது, அப்போது ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் திருகோணமலை அமைப்பாளராகவிருந்த சிங்களப்பிரமுகர், தனக்குத் தெரிந்த தமிழ்பிரமுகருக்கு இரகசியமாக அந்தப் பெயர்பட்டியலை வழங்கி, அத்தமிழ்இளைஞர்களைத் தப்பிக்கவைத்தார். ஆனால் அப்போதை பாராளுமன்ற உறுப்பினராகவிருந்த முஸ்லீம் தலைவரும், அவரது மைத்துணரான காவலதிகாரியும், தமிழ் இளைஞர்களைக் காட்டிக் கொடுப்பதிலும், கைது செய்வதிலும் மும்மரமாகச் செயற்பட்டார்கள். சாதாரண காவல்துறை அதிகாரியாக இருந்த அந்த நபர், இத்தகைய காட்டிக்கொடுப்புக்களால் சீனன்குடா பொலிஸ்நிலைய அத்தியட்சகராகவும், அதன்பின் புலனாய்வுத்துறை அதிகாரியாகவும் பதவி பெற்றார் எனவும், பின்பு ஒருதாக்குதலில் கொல்லப்பட்டார் எனவும் பின்னர் அறிந்தேன். இது நடந்தது எழுபதுகளின் இறுதியில். இங்கே நான் பெயர் குறிப்பிடாவிட்டாலும் கூட, அக்காலத்தில் அப்பகுதியில் வாழ்ந்த யாராவது இதை வாசிப்பார்களாயின், அவர்களால் யாரைக் குறிப்பிடுகின்றேன் என்பதை இலகுவாகப் புரியமுடியும். ஏனெனில் அந்தளவுக்கு அவர்களின் செயற்பாடுகள் பிரபலம்.


83 இனக்கலவரங்களோடு இணைந்து தென்தமிழீழப்பகுதிகளில் நடைபெற்ற கலவரங்களின்போது, தமிழ்க்கிராமங்களான தம்பலகாமம், முள்ளிப்பொத்தானை, கிராமங்கள் முதலான கிராமங்கள் சூறையாடப்பட்டது, சிங்களவர்களால் அல்ல. முஸ்லீம் ஊர்காவல் படையினரும், அவர்களோடு சேர்ந்த முஸ்லீம் காடையர்களும் என்பதும் அப்பகுதி மக்கள் அறிந்த உண்மை.

கிண்ணியா என்பது மூதூர்தொகுதியிலுள்ள ஒரு முஸ்லீம் கிராமம். அங்கே சிறுபாண்மையாக வாழ்ந்த தமிழ்மக்களில், சில இளைஞர்கள் கலவரம் ஒன்றின்போது, இராணுவத்தின் துணையோடு, முஸ்லீம் ஊர்காவல் படையால் வெட்டிக் கொல்லப்பட்டார்கள். அவர்களுக்குள் என் நண்பனொருவனும் இருந்தான். சிறு அளவிலான அந்த மக்கள் மத்தியில் அவனது திறமையும், ஆளுமையும், இப்பகுதி முஸ்லீம் சமுகத்திற்கு அச்சம் தர, தருணம் பார்த்து அவனும், மேலும் சிலரும், கொலை செய்யப்பட்டார்கள்.


தென்தமிழீழத்திலிருந்து விடுதலைப்போராட்டத்தில், (எல்லா இயக்கங்களுக்கும்) போராளிகளாகத் தமிழ்இளைஞர் இணைந்துகொள்ள, சிங்களப்பேரினவாதிகளின் வெறித்தனச் செயற்பாடுகள் மட்டும் காரணமல்ல... தென்தமிழீழ முஸ்லீம் தலைமைகளினதும், அவர்களது அடிவருடிக்கும்பல்களினதும், ஊர்காவல் படையென்ற பெயரில் , காடைத்தனம் புரிந்த முஸ்லீம் காடையர்களும் காரணமென்றால் அதுமிகையாகாது. புலியெதிர்ப்புவாதத்திற்காக பொய்மைகளைப் புனிதப்படுத்துவது நியாயமாகாது.

14 Comments:

  1. ENNAR said...
    இவ்வளவு சாமாச்சாராங்கள் இருக்கா சொன்னால் தான் தெரியும்.
    CAPitalZ said...
    நானும் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் சரியாகத் தெரியாமல் எழுதுவது இனத்துவேசம் ஆகிவிடும் என்பதால் எழவில்லை.

    உங்கள் பதிவிற்கு நன்றி. பல உண்மை விடையங்களை மேலும் வெளிச்சத்திற்கு கொண்டுவாருங்கள்.

    ______
    CAPital
    http://1paarvai.wordpress.com/
    http://1kavithai.wordpress.com/
    http://1seythi.wordpress.com/
    http://1letter.wordpress.com/
    Anonymous said...
    நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்? மூதூரிலுள்ள முஸ்லிம்கள் எல்லோரும் தமிழ் விரோதிகள், ஆகவே தண்டிக்கப்படவேண்டியவர்கள் என்றா?
    Anonymous said...
    மலை நாடர்!
    அவர்களில் சிலர் மதில் மேல் பூனையாகத் தான் வாழ்ந்தார்கள்; வாழ்கிறார்கள்;வாழ்வார்கள்! ; இவர்களை எக்காலத்திலும் மாற்ற முடியாது. பணம் ;பதவி எதையும் செய்யும். அத்துடன் அவர்கள் மனநிலையில் தமிழர்; முஸ்லீம் எனும் மனநிலை வந்து விட்டது.தமது மூதாதையரும் தாமும் தமிழர்கள் என்பதை மறக்க முயல்கிறார்கள். அரசியல்வாதிகளும் சுயலாபத்திற்காக அதை வளர்க்கிறார்கள்.ஆனால் சிங்கள ஏகாதிபத்தியம் இன்று தமிழ் பேசும் இந்துக்களுக்கும்;கிருஸ்தவர்களுக்கும் செய்ததைத் தான் ஒரு நாள் தமிழ் பேசும் இஸ்லாமியர்களுக்கும்; சந்தர்ப்பவசத்தால் சிங்களம் பேசும் இஸ்லாமியருக்கும் செய்யப் போகிறது. இவ்வுண்மையை அவர்கள் தலைவர்கள் இவர்களை உணரவிடுவதாக இல்லை. காலம் உணர்த்தும்.
    யோகன் பாரிஸ்
    Anonymous said...
    உங்களைப்போன்ற சம்பந்தப்பட்டவர்கள்
    தொடர்ந்து எழுதினால்தான் மாற்றி எழுதப்படும் மறைக்கப்பட்ட பல
    உண்மைகளை உலகம் அறியும்.
    மலைநாடான் said...
    என்னார்!
    பலவருடக்கதை ஓரிரு வரிக்குள் முடிந்துவிடுமா?

    கப்பிற்றல்!
    /சரியாகத் தெரியாமல் எழுதுவது இனத்துவேசம் ஆகிவிடும்/
    நீங்கள் சொல்வது மிகச்சரி.

    அனானி!
    /மூதூரிலுள்ள முஸ்லிம்கள் எல்லோரும் தமிழ் விரோதிகள், ஆகவே தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என்றா? /

    இந்தப்பதிவில்
    எந்தவொரு இடத்திலும் முஸ்லீம் மக்களையோ ஏன் சிங்கள மக்களைக்கூட குறைவாகச் சொல்லவில்லை. சிங்களப்பேரினவாதத்தைச் சுட்டுவது போன்று முஸ்லீம் காடைத்தனத்தையும், அதைச் செய்தவர்கள் யாரென்பதையும் சுட்டியிருக்கின்றேன். முஸ்லீம் தரப்பிலிருந்து தமிழ்மக்கள் மீது எந்தவொரு தாக்குதலோ காடைத்தனமோ நடக்காதது போன்ற தோற்றப்பாட்டை மறுதலிப்பது மட்டுமே என் நோக்கம்.

    என்னார், கப்பிற்றல், அனானி, உங்கள் கருத்துப் பகிர்தலுக்கு மிக்க நன்றி.
    மலைநாடான் said...
    வணக்கத்துடன்
    /ஒருமித்த உணர்வு அவர்களிடையே நிலவவில்லை.
    ஈழ நிலவரம் குறித்து இணையத்தில் பெரும்பாலும் 'பிரச்சாரம்' அல்லது 'காழ்ப்பு' மட்டுமே காண கிடைக்கிறது /

    நிதர்சனமான உண்மைகள். என்னால் முடிந்தவரைக்கும் உண்மையான தகவல்களை மட்டுமே பதிவு செய்து வருகின்றேன். சுமார் 45 வருடங்களுக்கு முன்னர்நடந்த சிங்கள முஸ்லீம் கலவரங்கள் பற்றிய தரவுகள் தற்சமயம் என்னிடம் இல்லை. ஆயினும் இலங்கையின் அரசியல் வரலாற்றுக் குறிப்புக்கள் உள்ள தளங்களில் அல்லது நூலகங்களில் கிடைக்குமென நினைக்கின்றேன்.

    யோகன்!

    உங்கள் கூற்று முற்றிலும் சரியானதே. இவற்றுக்கெல்லாம் காலம்தான் பதில் சொல் வேண்டும். ஆனால் அது காலங்கடந்த ஞானமாகிவிடும்.


    அனானி!

    உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.


    செந்தமிழன்

    உங்கள் கருத்துக்களை நாகரீகமாகச் சொல்லியிருக்கலாம். ஒரு இனத்தை அவமரியாதை செய்யும் வகையில் பாவிக்கப்படும் வார்த்தைகளை என்னால் அனுமதிக்க முடியாது. அதனால் தங்கள் கருத்து பிரசுரிக்கப்படவில்லை. மன்னிக்கவும்.

    அனைவர்க்கும் நன்றி!
    Chandravathanaa said...
    மலைநாடான்
    இந்த விடயங்கள் பலருக்கும் தெரியாது.
    தெரிந்தவர்களும் மறந்திருப்பார்களோ என எண்ணும்படியாக யாருமே இது பற்றிப் பேசுவதுமில்லை.
    உண்மைகளை எழுதுவது நல்லதே.
    வசந்தன்(Vasanthan) said...
    தென்தமிழீழத் தமிழ்மக்களோடு கதைக்கும் எவருமே நிறைய விசயங்களை அறிந்துகொள்ள முடியும். அவர்கள் ஏதோ மூளைச்சலவை செய்யப்பட்டோ, பிறர் சொல்லி அறிந்தோ நிகழ்வுகளைச் சொல்வதில்லை. தமக்கு நேர்ந்தவற்றை, தாம் அனுபவித்தவற்றை, தாம் நேரில் கண்டவற்றைக் கூறுவார்கள்.
    அவை சிங்கள இனவாதத்தால் அவர்கள் அடைந்த துன்பங்களுக்கு எவ்விதத்திலும் சளைக்காதவை.
    இப்போதுகூட அரசபடையின் எறிகணை வீச்சில் கொல்லப்பட்டதை ஒத்துக்கொண்டு, அதை புலிகளுக்கு எதிராகத் திருப்புவதைத்தான் எல்லோரும் செய்கின்றனர். சிங்கள அரசுக்கு எதிராக எதையும் அவர்கள் செய்யவில்லை.
    தம்மீது எறிகணைத்தாக்குதல் நடத்திய அரசுப்படைகளை எதிர்த்து எதுவும் பேசுவதில்லை.
    தம்மீதான இராணுவத்தினரின் தாக்குதலுக்கு புலிகள்தான் காரணமென்று பாதிக்கப்பட்டவர்களும் சரி, இங்கே நடுநிலையென்ற பேரில் கட்டுரை வடிப்பவர்களும்சரி சொல்லிக்கொண்டுள்ளார்கள்.
    Machi said...
    /ஏற்கனவே இடியப்பச் சிக்கலாகவே புரியப்பட்டிருக்கும், இலங்கை இனப்பிரச்சனை இன்னமும் குழப்பமாக அறியப்பட என் எழுத்துக்களும் அமைந்துவிடக் கூடாது என அமைதியாக இருந்தேன். ஆனாலும், போகிற போக்கில் புலியெதிர்ப்புக் கோஷத்தில், சில பொய்மைகள் புனிதப்படுத்துவதை ஏற்றறுக் கொள்ள முடியாமையால் இப்பதிவை எழுதுகின்றேன்/

    விபரம் அறிந்தவர்கள் சிலர் சிலவற்றை சொல்லாமல் விட்டால் அதனால் பலனை விட கெடுதலே அதிகம் அதாவது தவறான புரிந்துகொள்ளல் மூலமாக நடக்கும்.
    இப்போதுள்ள சார்பு ஊடகங்களால் மக்களுக்கு எது உண்மை என்றே தெரியாமல் போய்விடுகிறது. சில பேராவது உண்மைகளை அவ்வப்போது பதிய வேண்டும். அந்த முறையில் கிழக்கு ஈழ மக்களான தாங்கள் சிலவற்றை பதித்தல் நலம்.
    வெற்றி said...
    மலைநாடான்,
    நல்ல பதிவு. மிகவும் தேவையானதும் கூட. ஈழப் போராட்டத்தின் வரலாற்றையோ அன்றி உலகின் வேறு பல விடுதலைப் போராட்ட வரலாறுகளையோ அறியாத சிலதுகள் தாங்கள் ஏதோ மனித உரிமைக்காவலர்கள் போலவும் ஏதோ தமிழர்களும் புலிகளும் தமிழ் பேசும் முஸ்லிம் மக்களுக்கெதிரானவர்கள் எனும் தொணியில் பதிவுகள் இடுகிறார்கள். எடுத்துக்காட்டாக, யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த முஸ்லிம்களில் சிலர் சிங்கள இராணுவத்திற்கு உளவு வேலை செய்து தமிழர்களையும் , தமிழர் போரட்டத்தையும் நசுக்க சிங்கள அரசுக்குத் துணைபுரிந்தார்கள். இத் தகவல் சிங்கள இராணுவத்தின் இணையத்தளத்திலேயே குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழர்கள் எப்போதும் முஸ்லிம் மக்களை தமது சகோதரர்களாகவே கருதி வந்தனர். ஆனால் சிங்கள அரசு முஸ்லிம் மக்களுக்குச் சில சலுகைகளைக் கொடுத்து தமிழர்களுக்கெதிராக அவர்களைப் பயன்படுத்தியது. முஸ்லிம்களும் சலுகைகளுக்காக சிங்கள அரசின் சூழ்ச்சி வலைக்குள் வீழ்ந்து தமிழர்களுக்கெதிராகச் செயற்படத் துணிந்தார்கள். மட்டக்களப்பில் சில தமிழக்கிராமங்களில் இருந்து தமிழ்மக்கள் விரட்டியடிக்கப்பட்டு முஸ்லிம் கிராமங்களாக மாற்றப்பட்டன. சில சைவ வழிபாட்டுத்தலங்கள் அழிக்கப்பட்டு அங்கும் சிங்கள அரசின் உதவியுடன் தமிழர்கள் விரட்டப்பட்டு முஸ்லிம் குடியேற்றங்கள் அமைக்கப்பட்டன. தமிழர்களும் புலிகளும் முஸ்லிம்களுக்கு எதிரானவர்கள் எனும் பொய்யைப் பரப்பும் இந்த அறிவிலிகள், சிங்கள அரசின் உத்வியுடன் முஸ்லிம்கள் தமிழர்களுக்கெதிராகச் செய்த செய்துவரும் பயங்கரவாதத்தைப் பற்றி ஒரு வார்த்தையேனும் பேசாதது ஏன்? நான் முஸ்லிம் மக்களுக்கு எதிரானவன் அல்ல. பல ஈழத்தவர்கள் போல் நாம் முஸ்லிம் மக்களை எமது சகோதரர்களாகவே கருதுகிறோம். காரணம் அவர்களின் தாய்மொழியும் தமிழ்தான். ஆனால் சிங்கள அரசின் துணையுடன் தமிழர்களை அழித்து தாம் வாழலாம் எனும் எண்ணத்தை தமிழ்பேசும் முஸ்லிம் மக்கள் கைவிட வேண்டும்.
    இரா.சுகுமாரன் said...
    மறைக்கப் படும் உண்மைகளை எழுதுங்கள்.

    ஈழத்தமிழராகிய நீங்கள் எழுதுவதை நாங்கள் ஆதாரமாக கொள்கிறோம். செய்தி ஏடுகள், இதழ்கள் தமிழர்களுக்கு ஆதரவான செய்திகளை திட்டமிட்டே இருட்டடிப்பு செய்கின்றன.

    நியாயம் பேசும் செய்தி ஏடுகள் இருதரப்பு நியாங்களையும் பேச வேண்டும்.

    தகவலுக்கு நன்றி
    மலைநாடான் said...
    வசந்தன்!
    /தென்தமிழீழத் தமிழ்மக்களோடு கதைக்கும் எவருமே நிறைய விசயங்களை அறிந்துகொள்ள முடியும். அவர்கள் ஏதோ மூளைச்சலவை செய்யப்பட்டோ, பிறர் சொல்லி அறிந்தோ நிகழ்வுகளைச் சொல்வதில்லை. தமக்கு நேர்ந்தவற்றை, தாம் அனுபவித்தவற்றை, தாம் நேரில் கண்டவற்றைக் கூறுவார்கள்.
    அவை சிங்கள இனவாதத்தால் அவர்கள் அடைந்த துன்பங்களுக்கு எவ்விதத்திலும் சளைக்காதவை.
    /

    மிகச்சரியான அவதானிப்பு. நன்றி.

    சந்திரவதனா!

    தாங்கள் கூறுவதை மறுப்பதற்கில்லாவகையிலே நடைமுறைகள் உள்ளன.

    குறும்பன்!

    என்னால் முடிந்ததை நிச்சயம் தருவேன்

    வெற்றி!

    நித்திரைபோலுள்ளவர்களை எழுப்ப முடியாது. இலங்கையில் முஸ்லீம்களைப் பொறுத்த வரைக்கும் சரியான அரசியற்தலைமை இல்லாதது எமக்கும் கூட பாதிப்பாகத்தான் உள்ளது.

    சின்னக்குட்டி!

    உங்கள் தரவுகளுக்கு மிக்க நன்றி.

    இரா.சுகுமாரன்!

    உங்கள் ஆதரவுக்கும், ஆர்வத்துக்கும், மிக்க நன்றிகள்.
    Anonymous said...
    இப்போது இலங்கையில் உ;ளள சூழ்நிலையில் இதுபற்றி கதைப்பது கொஞ்சம் சிக்கலானதுதான், இருந்தாலும் முஸ்லீம்கிள்ன தமிழர்களுக்கெதிரான செயற்பாடுகள் வெளிவந்ததும் கொஞ்சம்தான், அதுமட்டுமலல அவை மறக்கப்பட்டும் விட்டன. கிழக்குமாகாணத்தில் கறிப்பாக கல்முனை, மருதமுனை ஆகிய பிரசேதங்களில் தமிழ் மக்களின் நிலங்கள் பெரும்பாலும் முஸ்லிம்களால் கைக்கொள்ளப்பட்டிருக்கின்றன. அங்கு திட்டமிட்ட வகையில் நிகழும் இனக்கலவரங்களால் தமிழ் மக்கள் மீது முஸ்லிம் காடையர்கள் வன்முறைகளை கட்டவிழ்த்துவிட்டுள்ளனர். ஜிகாத் குழு எனும் குழு தமிழர்களுக்கெதிரான வன்முறைகளை இன்றும் புரிந்து வருகின்றது. மருதமுனையில் லொறியோடு தமிழ் மக்கள் எரிக்கப்பட்டது. தமிழர்களை கடத்து தலைவெட்டி கடலில் வீசியமை. மூன்றாவது ஈழப்போர் ஆரம்பகாலகட்டத்pல் அவர்கள் பகுதியூடாக சென்ற தமிழ் மக்களை கொலை செய்தமை. இராணுவத்துடன் வேர்ந்து தமிழ் மக்களை கொலை செய்தமை என கல்முனை, மருதமுனை பிரதேசங்களில் ஏராளமானவற்றை நமது முஸ்லிம் சகோதரர்கள் புரிந்துள்ளார்கள். அது பற்றி யாரும் பேசமாட்டார்கள். இப்போது கூட பாருங்களேன் இந்த இடம் பெயர்வுக்கு எத்தனை அமைச்சர்கள், இந்தனை அரச அதிகாரிகள் கந்தளாயில் இருக்கிறார்கள் முஸ்லிம்களுக்கு. தமிழ் மக்கள் இவ்வளவு காலம் இடம் பெயர்ந்தமைக்கு ஏதாவது ஒரு அமைச்சர் வந்திருக்கின்றாரா. ஏன் இந்த பாரபட்சம்...??

Post a Comment




 

நன்றி, வணக்கம்.