எனது முன் பனிக் காலங்கள்.

திருவெம்பாவை பூசையும்
திருப்பள்ளியெழுச்சிப் பஜனையுமாய்
சுகமான ஒரு முன்பனிக்காலம்
எழுபதுகளில் எனக்கிருந்தது.

பின்வந்த எண்பதுகளில்
காவலும் கடமையுமாய்
கடலிலும் கரையிலும்
என் முன்பனிக்காலம் கழிந்தது.

தொன்னூறுகளின் தொடக்கத்திலோ
நெஞ்சு கனக்கும் நினைவுகளோடு
வெண்பனியுறையும் துருவக்
கரையின் தெருக்களில் நான்..

நன்றி - ' திசை'

4 Comments:

  1. Anonymous said...
    //பின்வந்த எண்பதுகளில்
    காவலும் கடமையுமாய்
    கடலிலும் கரையிலும்
    என் முன்பனிக்காலம் கழிந்தது.//

    ஆகா..மலை நாடன்...... என்ன சென்றிக்கு நின்றீங்களா..

    சும்மா பகிடிக்கு கண்டுக்காதையுங்க
    Anonymous said...
    திருவெம்பாவை பூசையும்
    திருப்பள்ளியெழுச்சிப் பஜனையுமாய்
    சுகமான ஒரு முன்பனிக்காலம்
    எழுபதுகளில் எனக்கிருந்தது

    மலைநாடர்!
    காலங்களில் இந்த மார்கழித் திருவெம்பாக் காலம் ஓர் அழகான காலம் தான்!!!காலைச் சங்கொலி;வீதிதோறும் பஜனை;ஆலயமணி ஓசை...பின்பு சுண்டல்..;மறக்கமுடியாத காலம். ஏனையவை மறக்கவிரும்புபவை!!
    யோகன் பாரிஸ்
    மலைநாடான் said...
    சின்னக்குட்டி!

    நான் இதை எழுதேக்க நினைச்சனானன். நிச்சயம் இந்த வரியளப்பிடிச்சுக்கொண்டு, இப்பிடிக் கேட்டுக் கொண்டு வருவியள என்டு. அதே மாதிரி வந்திட்டியள். :)))

    இது எனக்குத் தெரிந்தவர்களின் அனுபவமாகவும் இருக்கலாம் அல்லவா? :)
    மலைநாடான் said...
    //ஏனையவை மறக்கவிரும்புபவை//

    ஆனால் நான் எதையும் மறக்கவிரும்பவில்லை. ஒவ்வொன்றும் ஒவ்வொருவிதமான அனுபவம்.

Post a Comment




 

நன்றி, வணக்கம்.