இவ்வார வானொலி நிகழ்ச்சி

நண்பர்களே !

இணையத்தில் இன்பத்தமிழ் எனும் பெயரில், ஐரோப்பியத்தமிழ்வானொலியில் ஒலிபரப்பாகிய இவ்வார நிகழ்ச்சியினைக் கேட்க இங்கே

வாருங்கள்.
நன்றி!

19 Comments:

 1. Anonymous said...
  மலை,
  இவ்வார நட்சத்திரம் சிந்தாநதியுடனான கலந்துரையாடல் நன்றாக இருந்தது. 11 நிமிடங்களுக்கு மேல் உங்கள் நிகழ்ச்சியைக் கேட்க முடியவில்லை. உங்கள் தளத்தின் கோளாறா அல்லது என் தளத்தின் கோளாறா நான் அறியேன்!!!

  சிந்தாநதி தமிழகத்தைச் சேர்ந்தவரா? நம்ப முடியவில்லையே?! தமிழகத் தமிழர்கள் 10 சொற்கள் கதைத்தால் அதில் 5 சொற்களாவது ஆங்கிலச் சொற்கள் கலந்து வரும் என என் மனதில் இருந்த தோற்றத்தை, சிந்தாநதியின் பேச்சு தவிடு பொடியாக்கிவிட்டது. சிந்தாநதி, இந் நிகழ்ச்சிக்காக இப்படிக் கதைத்தாரா அல்லது இயல்பாகவே பேசினாரா என்பது எனக்குத் தெரியாது. இருப்பினும் இப்படியான நிகழ்வுகள் தமிங்கிலிசில் இல்லாமல் தமிழில் வருவது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

  மலைநாடான், சிந்தாநதி, உங்கள் இருவருக்கும் என் வாழ்த்துக்கள்.
  Anonymous said...
  மலைநாடர்!
  இத் தடவை உங்கள் விபரிப்பு மிக நன்று; நான் எதிர் பார்த்த அச் சிறு வேகம் உள்ளது. சிந்தா நதியின் மிக மென்மையான பேட்டி!பேட்டிகளில் கேள்வி சிறிதாக இருப்பதை நான் விரும்புவேன். அப்படியே அமைந்தது; இந்தத் தொழில் நுட்பச் சங்கதிகள் எங்கே??எனக்குப் புரியுது.
  கவிஞர் வில்வரெத்தினத்தின் குரல் பதிவு சொற்களைப் புரியச் சிரமமாக உள்ளது.இசை தெரிந்தவர் என்பது
  குரலில் புரிகிறது. சிந்தா நதி ஈழத்தமிழ்;மதி தமிழ் நாட்டுத் தமிழ் ..நல்லாத் தான் இருக்கிறது.
  இசைச் சேர்ப்பு இதமாக இருந்தது.
  மொத்தம் மெருகேறுகிறது. பாராட்டுக்கள்!
  யோகன் பாரிஸ்
  -/பெயரிலி. said...
  /சிந்தா நதி ஈழத்தமிழ்;மதி தமிழ் நாட்டுத் தமிழ் ..நல்லாத் தான் இருக்கிறது./
  போச்! ;-)

  மலைநாடன், உங்கள் (ஒலிப்)பதிவு நன்றாக விரிகின்றது. சிந்தாநதியின் செவ்வியும் நன்றே.

  வலைத்திரட்டிகள், தனியார்வலைப்பதிவுகள் பற்றிக் குறிப்பிடும்போது அவற்றின் இணையமுகவரிகளையும் எழுத்துக்கூட்டிச் சொல்லி, அவை பற்றிய விபரங்களைத் தவறாதிருக்க உங்கள் நெய்தல்கரை பதிவிலும் தருவீர்களெனச் சொன்னால், வானொலி/இணையவொலி கேட்போருக்கு, வலைப்பதிவுகள் குறித்த தொடர்பு விரிய வழி பெருகுமல்லவா?

  அதுசரி; நெய்தல்கரையா? நெய்தற்கரையா? (எந்தவேட்டிக்குக் கரை நெய்தேனெனக் கேட்கக்கூடாது ;-))
  மலைநாடான் said...
  test
  சின்னக்குட்டி said...
  மலைநாடன் நிகழ்ச்சியை கேட்டேன் . பேட்டி கேள்வி பதில் போல் இருந்தது... உரையாடல் போல் செய்வது கஸ்டமா.. எப்படியிருப்பினும் இந்த புது முயற்சிகளுக்கு எனது வாழ்த்துக்கள்
  மலைநாடான் said...
  சோதனைதான்
  மலைநாடான் said...
  வெற்றி!

  மேலதிக இணைப்புக்கு வகை செய்கின்றேன். சற்றுப்பொறுத்துக் கொள்ளுங்கள்.

  சிந்தாநதி, மிகவும் சிறப்பாக ஒத்துழைத்தார். அவரது தமிழ்உரையாடல் எனக்கும் மகிழ்வாயிருந்தது.

  உங்கள் கருத்துக்களுக்கும் ஆதரவுக்கும் நன்றி.
  மலைநாடான் said...
  யோகன்!

  உங்கள் கருத்துக்களுக்கும், பாராட்டுக்களுக்கும் மிக்க நன்றி.
  வெற்றி said...
  மலை,
  பதிவுக்குச் சம்பந்தம் இல்லாத பின்னூட்டம். ஆர்வக் கோளாறு. மன்னித்தருள்க.

  உங்களின் தளத்தின் தலைப்பில் இருக்கும் ஆலயம் எந்த ஆலயம்? இவ் ஆலயம் ஈழத்திலா அல்லது தமிழகத்திலா உள்ளது?
  மலைநாடான் said...
  பெயரிலி!

  அடி சறுக்கிய கரையாயிற்று...:))

  சின்னக்குட்டி!

  செவ்வி என்பது கேள்விபதிலாகத்தானே இருக்கும். உங்கள் விருப்பத்திற்குரிய கலந்துரையாடல்களும் வரும்..

  வெற்றி!
  உங்கள் ஆர்வத்துக்கு மிக்க மகிழ்ச்சி. படத்திலிருப்பது, நானிழந்த மருதநிலக்கிராமமான தம்பலகாமம். அங்கேயுள்ள சரித்திரப் பிரசித்த பெற்ற, ஆதிகோணேஸ்வரர் கோவில். மிகப்பெரிய கோவிலின், ராஜ கோபுரம் தூரப்பார்வையில் தெரிகிறது.
  மதி கந்தசாமி (Mathy) said...
  மலைநாடான்,

  போனகிழமையிலும் பார்க்க நல்லாயிருக்கு. சிந்தாநதியுடனான உரையாடலுக்கு நன்றி!

  திருஷ்டிப்பரிகாரமா நடுவில ஒரு குரலை ஒலிக்கவிட்டுச் சதி செய்திட்டீங்களே. அது 2004இல சு.வில்வரத்தினத்தின்ற பாடல்களைப் போடேக்க கதைச்சது. அப்பவெல்லாம் எடுத்தோடன இந்தியன்தமிழ்தான் உடன வரும். [இiப்பவுந்தானெண்டு யாரங்க கிசுக்கிசுக்கிறது? ;)]. நீங்க பாட்டை மட்டுந்தான் போடப்போறீங்கள் எண்டு நினைச்சா, இப்படிக் கவுத்துட்டீங்களே?

  //சிந்தா நதி ஈழத்தமிழ்;மதி தமிழ் நாட்டுத் தமிழ் ..நல்லாத் தான் இருக்கிறது.
  //

  யோகன் - பாரீஸ்: ஹிஹி நன்றி! :)

  -மதி
  கானா பிரபா said...
  வித்தியாசமான முயற்சிகள், நன்றி
  கானா பிரபா said...
  ஒலிப்பதிவு இணைப்பினைக் கவனிக்கவும், இணைப்பு இப்போது காணாமல் போய்விட்டது
  மலைநாடான் said...
  // நீங்க பாட்டை மட்டுந்தான் போடப்போறீங்கள் எண்டு நினைச்சா, இப்படிக் கவுத்துட்டீங்களே?//

  நண்பர்களின் கருத்துக்கள், கவுத்தமாதிரிச் சொல்லேல்லையே:))
  மலைநாடான் said...
  பிரபா!

  சக ஒலிபரப்பாளனாக உங்களிடம் இன்னமும் எதிர்பார்த்தேன்:)

  இப்போது மேலும் ஒரு இணைப்புக் கொடு்த்தாயிற்று.

  நன்றி!
  கானா பிரபா said...
  இப்பொழுது தான் முழுமையாகக் கேட்டேன். நான் முன்னர் சொன்னது போல பாலசுப்பிரமணியத்தையும் செளந்தரராஜனையும் அலுக்க அலுக்கத் தருவதை விட இம்மாதிரி வானொலி நிகழ்ச்சிகளுக்கு எப்பொழுதும் நிபந்தனையற்ற ஆதரவு கொடுப்பேன் ;-) சிந்தாநதி அண்ணை நல்லாக் கதைச்சார். கொஞ்சம் பதுங்கிப் பதுங்கி பேசினமாதிரி இருந்தது.ஆளைப் பயப்பிடித்தினியளே?

  மதியின் வலைப்பதிவில் வில்வரத்தினது விடயம் முன்னரே கேட்டிருக்கிறேன். வலை பார்க்காத பலருக்கும் சென்றடைய வைத்திருக்கிறீர்கள்.
  மலைநாடான் said...
  பிரபா!

  உங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றி. உங்களைப்போன்ற திறமையான ஒலிபரப்பாளர்களின் அனுசரணை மேலும் நிகழ்ச்சியைச் செழுமைப்படுத்துன நம்புகின்றேன்.
  நன்றி!
  செல்வநாயகி said...
  ///கொஞ்சம் பதுங்கிப் பதுங்கி பேசினமாதிரி இருந்தது.ஆளைப் பயப்பிடித்தினியளே///

  :)))))))


  மலைநாடான், சிந்தாநதி, உங்கள் இருவருக்கும் வாழ்த்துக்கள்.
  மலைநாடான் said...
  செல்வநாயகி!

  மிக்க நன்றி, உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும்.:)

Post a Comment
 

நன்றி, வணக்கம்.