பிரான்ஸ் அரசியலில், ஈழத்தமிழர்கள்.
Published by மலைநாடான் on Tuesday, March 18, 2008 at 10:40 PMதமது சொந்த மண்ணின் அரசியல் இன்னல்களால், புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள், இப்போ தாம் வதியும் நாடுகளிலுள்ள அரசியல் செயற்பாடுகளில் இணைந்துவருவது தெரிந்ததே. அன்மையில் பிரான்ஸில் நடைபெற்று முடிந்துள்ள உள்ளுர் தேர்தலில் 12 தமிழர்கள் தெரிவாகியுள்ளனர். இவர்கள் பாரிஸ் மற்றும் அதன் சுற்றுப்புற உள்ளுராட்சி மன்றங்களுக்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.
இதில் 7 பேர் ஈழத் தமிழர்களாவர். மூவர் பாண்டிச்சேரியை சேர்ந்தவர்களாவர். இதேவேளை ஈழத் தமிழர்கள் பிரான்ஸின் தேர்தலின் மூலம் தெரிவாகியுள்ளமை அங்குள்ள ஈழத் தமிழர்கள் மத்தியில் புத்துணர்வை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரான்ஸில் சுமார் 125 ஆயிரம் தமிழர்கள் வாழ்கின்றனர். இதில் 50 ஆயிரம் பேர் ஈழத்தமிழர்களாவர். பிரான்ஸின் உள்ளுராட்சி தேர்தலில் 14 ஈழத்தமிழர்கள் போட்டியிட்டனர்.
தேர்தலில் வெற்றி பெற்ற ஈழத் தமிழர்கள் அனைவரும் இடதுசாரி கட்சிகளை பிரதி நிதித்துவப்படுத்தி போட்டியிட்டவர்களாவர். இதே வேளை இந்த தெரிவுகளின் மூலம் பிரான்ஸின் தமிழர்கள் வலதுசாரி கட்சியான தற்போது அரசாங்கத்தின் மீது தமது வெறுப்பை வெளிப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வெற்றிபெற்றவர்களுக்கும், வெற்றிபெறச் செய்தவர்களுக்கும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.
கடந்த வருடத்தில் நோர்வேயில் இடம்பெற்ற உள்ளுர் தேர்தலில் ஈழத் தமிழர்கள் ஐவர் தெரிவு செய்யப்பட்டனர். இந்த தேர்தலில் நோர்வேயில் உள்ள 70 வீத ஈழத் தமிழ் பெண்கள் தமது வாக்குகளை செலுத்தியதாக புள்ளிவிபரங்கள் தெரிவித்திருந்தன..
சுவிற்சர்லாந்து தேசிய அரசுத் தேர்தலில் போட்டியிட்ட ஈழத்துப் பெண் குறித்த செய்திகளை இங்கு படிக்கலாம்.

இதுவும் பிடிக்கும், படிக்கலாம்.
3 Comments:
Subscribe to:
Post Comments (Atom)
புகலிட அரசியலில் அங்கம்பெறும் நம்மவர் அனைவரும் பாராட்டுக்குரியவர்களே.
தமிழ்ப்பத்திரிகைகளில் செய்தி கண்டேன்.
இம்முறை இடது சாரிகள் அதிக இடம்
பெற்றது குறிப்பிடத்தக்கது.
ஆளும் வலதுசாரிகளின் பொருளாதாரக் கொள்கையால் விலை
வாசிகள் உயர்ந்து விட்டன. அந்த வெறுப்பு இத் தேர்தலில் தெரிகிறது.
இங்குவாழும் ஈழத்தமிழர்களில் பெரும்பான்மை இயல்பாகவே சோசலிசக் கட்சி ஆதரவாளர்கள்.
80 களில் பதவியில் இருந்த மித்திரனின் அரசு அகதிகள் விடயத்தில்
மிக ஆதரவாக நடந்தது.இன்று பல தமிழருக்கு வாக்குரிமை இருப்பதற்கு
அந்த அரசின் வதிவிட உரிமை அங்கீகாரமே காரணம். அதன் நன்றியாக பல தமிழர்கள் இடதுசாரிகளை ஆதரிப்பதில் வியப்பில்லை.
அத்துடன் இந்த அரசு எடுத்த கைது நடவடிக்கை ,பலரால் விரும்பப்படவில்லை.அதுவும் வலதுசாரிகளுடன் தேர்தலில் சேர்ந்தியங்காததற்கு காரணமாகிறது.
எப்படியும் இது ஒரு நல்ல மாற்றமே!!
அனைவரும் தமிழ்மக்களின் நலனிலும்
அக்கறை கொள்வார்கள் என நம்பி வாழ்த்துவோம்.